புதன், 12 ஆகஸ்ட், 2015

ஜூனியர் ரெட் கிராஸ் என்னும் அமைதிப்படை


       இன்றைய நிகழ்வு மிகவும் விசித்ரமாகவும் அதே நேரம் சுவாரஸ்யமாகவும் அமைந்த நிகழ்வு. ஒரு மாணவனிடம் நாம் என்னென்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை மற்ற நாட்களை போலவே இன்றும் நன்றாகவே உணர்தேன். இன்று அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலை பள்ளியில்  ஜெனீவா ஒப்பந்த நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆரம்பம் முதலே மாணவர்கள் ஆர்வமுடன் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெற்றனர்.
     ஒவ்வொருவராக கருத்தரங்க தலைப்பை பற்றி பேசி முடித்தனர். இறுதியாக இ்ரண்டு மாணவர்களை ஏற்புரை வழுங்குமாறு அழைத்ததும் சட்டேன்று ஒரு மாணவி எழுந்து "
 இனி எங்கும் குப்பை கிடந்தால் அதை எடுப்பேன், அய்யா அப்துல் கலாம் போல் பெரிய வின்ஞானியாவேன் ், இனி ஒருபோதும் எங்கும் சண்டைகள் நடக்க விட மாட்டேன்" என்று கூறி அமர்ந்தாள். அந்த சிறுமி மேடை விட்டு கீழே இறங்கும் போது அவளிடம் இந்த கருத்தரங்கு அவளை எந்தளவு கவர்ந்திருக்கிறது என்பதும், அவளிடம் ஏற்பட்டிருந்த உத்வேகமும் அவள் முகத்தில் தெரிந்தது.
நிச்சயம் இவளை போன்றவர்கள் சாதிப்பர்: ஒரு அமைதிப்படை உருவாகும் என்பதில்  எள்ளளவும் சந்தேகம் இல்லை.!!! நட்புடன் ஸ்ரீ

6 கருத்துகள்:

  1. ஆஹா! பயிற்சியின் விளைவு இப்படி தான் இருக்க வேண்டும். மாணவிக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா...

    பதிலளிநீக்கு
  3. அட! விதை வளரத் தொடங்கிவிட்டது......அந்த மாணவிக்குப் பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகளுக்கான தளங்களை நாமே ஆக்ரமித்துக்கொள்கிறோம் ஸ்ரீ ...
    பள்ளி நிகழ்வுகளைக் கூட அவர்களே நெறியாள்கை செய்தால் நன்றாக இருக்கும் ..
    பயிற்சி தர நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அய்யா அவர்கள் பள்ளிக்கு தவறை செய்துகொள்ளவே வருகிறார்கள், நாமோ அவர்களை தவறு செய்யவேவிடுவதில்லை... நம்முடைய உளவியல் குறைபாடு

      நீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...